--- --:--:-- --

யமுனை ஆற்றல் சிக்கிய டால்பினை சமைத்து சாப்பிட்டவர்கள் கைது..!

3

முனை ஆற்றில் மீன் பிடிக்க சென்ற பொழுது எதிர்பாராத விதமாக வலையில் சிக்கிய டால்பினை சமைத்து சாப்பிட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்றால் வட மாநிலங்களான உத்திர பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற இடங்களில் தீவிர கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதனால் யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி காலையில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் வீசிய வலையில் டால்பின் சிக்கி உள்ளது. பின்னர் அவர்களை தோளில் சுமந்து கொண்டு தெருவில் சென்றனர்.

 

இதனையடுத்து அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதனை சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில் டால்பினை சாப்பிட்டதாக நான்கு மீனவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon