--- --:--:-- --

கார்ப்பரேட் ஆவதற்கு மணிப்பூர் வன்முறை.. அடுத்தடுத்து தமிழ்நாட்டிற்கு ஏற்படும் ஆபத்து..

6

கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்வதற்காகவே மணிப்பூர் கலவரத்தை பாஜக முன்னின்று நடத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

 

மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் பகுதியில் மணிப்பூர் வன்முறையில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது பேசிய தொல் திருமாவளவன் மணிப்பூர் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் சட்ட திருத்தம் செய்வதை பாஜகவின் நோக்கம் எனக் கூறினார்.

 

மேலும் மணிப்பூர் முதலமைச்சரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தவர் கலவரத்திற்கு தானே பொறுப்பேற்ற பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். மணிப்பூரில் நிலவும் கலவரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon