சிசிடிவி கேமரா பதிவுகளை 18 மாதங்கள் வரை பாதுகாக்க நடவடிக்கை – காவல் துறை
காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை 18 மாதங்கள் வரை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1,578 காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவ ரூ.38.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





