மகன் இறப்பால் சைக்கோ ஆன தந்தை..!
காங்கோவில் மகனின் இறுதி சடங்கில் 13 பேரை சுட்டுக்கொன்ற தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கோ நாட்டில் அழகோவா பகுதியை சேர்ந்தவர் முக்குவான்.
கடற்படை வீரர் திடீரென இறந்து விட்டார். இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்த பொழுது ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது திடீரென ஆவேசம் அடைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த 13 பேரை சரமாரியாக சுட தொடங்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் உயிருக்கு பயந்து சிதறி ஓடியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒன்பது குழந்தைகள் உட்பட 13பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை அனுமதிக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





