ரத்த வெள்ளத்தில் அதிமுக பிரமுகர்..!
நெல்லை பேட்டையில் முன்னாள் அதிமுக ஊராட்சி துணை தலைவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மயிலாபுரம் பகுதியை சேர்ந்த பிச்சைராஜ் என்பவர் எம்ஜிஆர் நகர் டாஸ்மாக் மதுபான கடையில் பார் ஒன்றை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு பணிகளை முடித்துவிட்டு எம்.ஜி.ஆர் நகர் பாரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பேட்டி ரயில் நிலையம் வீரபாகு வழியாக பிச்சை ராஜ் சென்றுள்ளார்.
அப்பொழுது ரயில்வே சுரங்கத்தில் நின்றிருந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





