திடீரென ரயில் முன் பாய்ந்த பெண்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்..!
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்டம் அம்மூர் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் கார்த்திக் – செல்வராணி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. கார்த்தி கட்டட வேலை செய்து வரும் நிலையில் செல்வராணியுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தயாராகி ஏற்பட்டதால் மனமுடைந்த செல்வராணி அம்மூர் அயல் நிலையத்திற்கு சென்று அதிகாலை சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஆலப்புழா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவல் அறிந்து வந்த காட்பாடி போலீசார் செல்வராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





