சோனியா, ராகுல் காந்தி சென்ற விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்..!
மோசமான வானிலை காரணமாக சோனியா காந்தி, ராகுல் ஆகியோர் சென்ற விமானம் போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பெங்களூர் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டனர்.
அப்போது மோசமான வானிலை காரணமாக அவர்கள் சென்ற விமானம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





