கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது : இபிஎஸ்
பாஜக தலைமையிலான கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாடு சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 330 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கை அருகிலேயே அவர் அமர வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





