மலை கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த கிராமவாசி..!
திருப்பூர் மாவட்டத்தில் மழை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள குருமலை கிராமத்திற்கு இதுவரை சாலை வசதி இல்லை அந்த கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் தொட்டில் கட்டி சுமந்தபடி பாறைகள் நிறைந்த கரடு முரடான பகுதியின் வழியே சென்றனர்.
இப்படியே 7 கிலோமீட்டர் தூரம் வந்தவர்கள் அடிவாரத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை வசதி கேட்டு கிராமத்தினர் போராட்டங்கள் நடத்திய நிலையில் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





