திடீரென பைக் இடுக்கில் பாம்பு புகுந்ததால் ஓட்டுநர் பதற்றம்..!
திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு எண் பெற வந்த வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் tvs jupiter என்ற புதிய வாகனத்தை வாங்கி வாகன பதிவு எண் பெற வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் காத்திருந்தார்.
வாகனத்தை பார்வையிட வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சென்ற பொழுது அந்த புதிய வாகனத்தில் பாம்பு ஒன்று புகுந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல்கள் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கொம்பேறி மூக்கன் விசத் தன்மை கொண்ட பாம்பு என்பது தெரிய வந்தது. வாகனத்தை முழுவதுமாக சோதனை செய்து பாம்பை பிடித்து அகற்றினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





