--- --:--:-- --

காதலிக்க சொல்லி இளைஞர் தொல்லை கொடுத்ததால் பெண் எடுத்த விபரீத முடிவு..!

9

குடியாத்தம் அருகே காதலிக்குமாறு கூறி இளைஞர் தொல்லை கொடுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வேலூர் மாவட்டம் தரங்கம்பேட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சந்துரு என்பவர் காதலுக்குமாறு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவியை வழிமறித்து சந்துரு, காதலிக்குமாறு வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மாணவியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

 

இதனால் வேதனை அடைந்த மாணவி லைசால் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்துருவை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon