--- --:--:-- --

லட்ச லட்சமாய் கொடுத்து கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம்..!

6

தர்மபுரி அருகே 58 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தத்தில் மேற்கூறையிலிருந்து மழை நீர் ஒழுகியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

 

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமாரை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆட்சியர் அலுவலகம் அருகே சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

 

குளிர்சாதன பெட்டியுடன் கூடிய இந்த ஈரடுக்கு பேருந்து நிறுத்தம் அண்மையில் திறக்கப்பட்டன. இதில் ஏடிஎம் மையம் திறப்பு, அங்காடி, தாய் சேய் பாலூட்டும் அறை, மினி நூலகம், தொலைக்காட்சி என பல வசதிகள் இடம் பெற்றுள்ளன.

 

தருமபுரியில் பெய்த மழையின் பொழுது நவீன பேருந்து நிறுத்தத்தின் மேற்கூறையிலிருந்து மழை நீர் ஒழுகியது. பேருந்து நிழல் கூடம் முழுவதும் மழை நீர் மூழ்கியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன பேருந்து நிழல் கூடம் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே மழைநீர் வழங்கியதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon