பிரபல யுடியூபர் சாலை விபத்தில் மரணம்.. அதிர்ச்சி அடைந்த சப்ஸ்க்ரைபர்கள்..!
சத்தீஸ்கரை சேர்ந்த பிரபல இளம் யூடியூபர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த விவசாயி மகன் தீபராஜ். இவருக்கு வயது 22 ஆகிறது.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல ஹிந்தி திரைப்பட வசனத்தை தனது பாணியில் நகைச்சுவையாக பேசி பிரபலமடைந்தார். பல வீடியோக்களை பதிவிட்டவருக்கு youtube இல் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வந்தனர்.
மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆவண படங்களிலும் நடித்து வந்ததால் அந்த மாநில முதலமைச்சருடன் மிக நெருங்கி பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் youtube வீடியோகாக தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது பின்னால் வந்த லாரி வரும்போது பயங்கர விபத்திற்கு உள்ளானதில் தூக்கி வீசப்பட்ட தேவராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரது மரணம் சத்தீஸ்கர் மாநில மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இளம் வயதிலேயே அதீத திறமை கொண்டவர் இறந்துவிட்டதாக அமைச்சருக்கு தெரிவித்திருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





