--- --:--:-- --

புதிதாக கட்டப்பட்டு வரும் சமூக நலக்கூடம் அருகில் கட்டடங்கள் இடிந்து விழும் அபாயம்..!

5

சென்னை கண்ணகி நகரில் தமிழக அரசால் கட்டப்படும் சமூக நலக்கூடத்தால் அருகில் உள்ள கட்டிடம் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் அச்சத்தில் வசித்து வருகின்றனர்.

 

சென்னை கண்ணகி நகரை ஒட்டிய பிரதான சாலையில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சமூக நலக்கூடம் கட்டும் பணி நடைபெறுகிறது. ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. மேலும் சமூக நலக்கூடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

 

இதற்கு அருகில் 2006 ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கும் 36 வீடுகளில் சுமார் 150 பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளம் ஆழமாக தோண்டப்பட்டதால் அடுக்குமாடி கட்டிடத்தை தூண்கள் வெளியே தெரியும் அளவிற்கு காணப்படுகிறது.

 

மேலும் தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றிலும் பாதுகாப்பு தடுப்புகள் இல்லாததால் குழந்தைகள் மற்றும் விரைவில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

இது குறித்து அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon