பேருந்து மோதி விபத்து.. காயம் அடைந்த சிறுமிகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தமிழிசை..!
புதுச்சேரியில் பேருந்து மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுமிகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதலமைச்சர் ரங்கசாமி இருவரும் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
புதுச்சேரி மூலக்குளத்தில் இருந்து எட்டு சிறுமிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோ மீது பேருந்து மோதியது. இதில் படுகாயம் அடைந்த எட்டு சிறுமிகள் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி இருவரும் மருத்துவமனைக்கு சென்று சிறுமிகளுக்கு வழங்கும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டிருந்தனர். மேலும் சிறுமிகளின் பெற்றோர் அச்சப்பட வேண்டாம், அரசு ஊழிய நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உறுதி அளித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





