அவதூறு பேச்சு.. பாஜக பெண்ணை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறை..!
கோவையில் தந்தை, பெரியார் உள்ளிட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜகவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடமிருந்து சிறந்த செயற்பாட்டாளர் விருது பெற்ற உமா என்ற அந்த பெண் மூன்று தலைவர்கள் குறித்து அவதூறு பரவி வந்துள்ளார். பெரியார், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரையும் விமர்சித்து வந்துள்ளார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களில் உமா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கோவை சைபர் பிரிவு காவல் துறையினர் உமாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





