சென்னையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் – அமைச்சர் சேகர்பாபு
சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சேகர் பாபு, பொறுப்பு ஆணையர் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு சென்னையில் பெய்து வரும் மழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் முழுமையான பாதுகாப்புடன் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





