ஐந்து ரூபாய்க்கு இஞ்சி தர மறுத்த மளிகை கடைக்காரர்.. ஆத்திரத்தில் கடையை தரைமட்டம் செய்த கஷ்டமர்..!
சென்னை வேங்கை வாசலில் ஐந்து ரூபாய்க்கு இஞ்சி தர மறுத்த கடைக்காரர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த வேங்கை வாசலைச் சேர்ந்தவர் இவர். அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடைக்கு வந்த ஒருவர் ஐந்து ரூபாய்க்கு இஞ்சி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் இஞ்சி விலை அதிகம் என்பதால் கடை உரிமையாளர் இஞ்சி தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர் ஐந்து ரூபாய்க்கு இஞ்சி தரமாட்டியா நான் ஊர் தலைவர் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் அழை த்து வந்து மளிகை கடைக்காரரே கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக மளிகை கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





