--- --:--:-- --

தந்தை, அம்மா, மகன் எனும் மூவரும் கொள்ளையில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம்..!

1

சினிமா படம் எடுப்பதற்காக தனது இரண்டு மனைவிகளை நான்கு மகன்களை வழிப்பறி கொள்ளையர்களாக மாற்றிய நபரை கோவில்பட்டி போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த பூமாரி என்ற பெண்ணிடம் கடந்த மாதம் 15 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த ஆசாமிகள் 12 சவரன் தங்கச் சங்கலியை பறித்து சென்றனர். அதேபோல ஏ.கே.எஸ் தியேட்டர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் 6 சவரன் நகையை பறித்து சென்றனர்.

 

எந்த வழிப்பறிகள் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் திண்டுக்கல் செம்பட்டி பகுதியைச் சேர்ந்த சனாபுல்லா என்பவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்தனர்.

 

அப்பொழுது தன்னை சினிமா தயாரிப்பாளர் என்றும், நான் அவன் தான் என்ற பெயரில் படம் தயாரித்து வருவதாகவும் அவர் முதலில் கூறினார். போலீசார் தொடர்ந்து விசாரித்ததில் குடும்பத்துடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டதை சனாபுல்லா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon