--- --:--:-- --

திறப்பு விழாவை புறக்கணித்த நிலையில் எதிர்க்கட்சிகள் எடுத்த அதிரடி முடிவு..!

6

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் ஜூன் 12-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளனர். பாட்னாவில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

 

முதலமைச்சர் நிதிஷ்குமார் அழைப்பின் பேரில் மேற்கு வங்க முதலமைச்சர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ்தாக்கரே, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் எச்சுரி ஆகியோருக்கும் நிதீஷ் குமார் அழைப்பு விடுப்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon