கணவனை ஆள் வைத்து கொலை செய்த மனைவி..!
காதலனுடன் கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மீன் வியாபாரியும் ஆறு குழந்தைகளின் தந்தையுமான ஈஸ் முகமது விழா தனது வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது இரவில் சில மர்ம நபர்களால் அவரை சுட்டுக் கொல்லப்பட்டார். விசாரணையில் சில நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இறந்தவரின் மனைவி ரோஜா தான் முக்கிய குற்றவாளி என்பதும் அவர்தான் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏவியுள்ளது அம்பலமானது.
மேலும் விசாரணையில் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததை கணவன் கண்டித்த ஆத்திரத்தில் ஆண் நண்பருடன் இணைந்து கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்ததும் தெரிய வந்தது.
அதுமட்டுமின்றி கணவனை கொலை செய்யும் பொழுது வீட்டு ஜன்னல் வழியாக கொலை சம்பவத்தை பார்த்து ரசித்தார் என அவரின் காதலன் கூறியுள்ளார். நான்கு பேரையும் உயிரிழந்த வியாபாரியின் மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





