ஹிஜாப் அணிந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள்..!
கன்னியாகுமரி அருகே ஹிஜாப் அணிந்து வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாகர்கோவில் அருகே உள்ள இடலக்குடி பகுதியில் வசித்து வரும் உமர் பாபு என்பவரின் வீட்டுக்கு ஒரு பெண் உட்பட ஐந்து பேர் நுழைந்துள்ளனர்.
கட்டிப்போட்டு வீட்டிலிருந்து பொருட்களை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். உமர் அவர்களின் மனைவியும் மற்றும் குழந்தை வருகை தந்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கொள்ளையர்களை விட்டுச் சென்ற போலி துப்பாக்கி, அரிவாள் போன்ற பொருட்களை கைப்பற்றி விசாரணைக்கு கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





