வயிற்றுக்குள் கேப்சூல் வைத்து கடத்தல்..!
திரைப்படங்களில் வருவதைப் போல தங்கத்தை கேப்சூல் வடிவில் மாற்றி கேப்சூல்களில் அடைத்து பெருங்குடலில் மறைத்து கடத்தி வந்த ஆண் பயணியை விமானத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மஸ்கட்டில் இருந்து ஹைதராபாத் விமான நிலையம் வந்த அந்த பயணியிடம் இருந்து 42 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 685 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





