ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டு சென்றார். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் வரும் 21ஆம் தேதி வரை ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றுள்ளார்.
முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் ஜப்பான் பிரதமர் அழைப்பின் பேரில் ஜி 7 மாநாட்டில் பங்கேற்க போவதாக குறிப்பிட்டு இருந்தார். ஜி 20 நாடுகளுக்கு தலைமை வகிக்கும் இந்த உச்சி மாநாட்டில் இந்தியாவின் பங்களிப்பு பொருத்தமாக இருக்கும் என மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பப்புவாக்கினியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





