எச்சரிக்கையையும் மீறி கோடை விடுமுறையிலும் வகுப்பு நடத்தும் தனியார் பள்ளி..!
அரசின் எச்சரிக்கையை மீறி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கோடை விடுமுறையிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் தற்பொழுது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் எச்சரிக்கையை மீறி நாமக்கல் மாவட்டம் போது பட்டு பகுதியுள்ள தனியார் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் கேட்ட பொழுது இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் கோடை வகுப்புகள் நடத்தப்படுவது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





