--- --:--:-- --

சாலையோரம் நடந்து சென்ற இளைஞர் மீது ஏறிய லாரி..!

10

சென்னை தாழங்குப்பம் உலகநாதபுரம் பகுதிகளில் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் சாலைகளில் நடக்க இயலவில்லை எனக் கூறி பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு கனரக வாகனங்கள் வராது என உறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அந்த பகுதியில் நடந்து சென்ற அருந்தாஸ் என்பவர் லாரியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார்.

 

ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே விபத்தின் சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon