--- --:--:-- --

காங்கிரஸ் பாஜக தொண்டர்களிடையே வெடித்த மோதல்.. கர்நாடகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு..!

9

கர்நாடகாவில் மங்களூர் புறநகர் பகுதிகளில் உள்ள பகுதியில் நேற்று மாலை வாக்கு பதிவு நிறைவடைந்த பிறகு காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

 

வாக்குச்சாவடியில் ஏற்பட்ட சிறு வாக்குவாதம் காரணமாக வாக்கு பதிவிற்கு பிறகு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

 

இந்த மோதலின் பொழுது காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் கார் அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு பதற்றுமான சூழல் நிலவியதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon