பாத யாத்திரை சென்றவர்கள் மீது அரசு பஸ் மோதி விபத்து..!
திருத்தணி அருகே பாதயாத்திரை சென்றவர்கள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். திண்டிவனம் அடுத்த கிராமத்தை சேர்ந்த 37 பேர் ஒரு குழுவாக திருத்தணி கோயிலுக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர்.
திருத்தணி அருகே உள்ள பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற குழுவினர் மீது சென்னையை நோக்கி வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் சீதாராமன், நாராயணன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





