--- --:--:-- --

அரசு பேருந்து நின்று செல்லும் உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை..!

2

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது ஏராளமான அளவில் கெட்டுப்போன உணவு பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

அவற்றை பறிமுதல் செய்து குப்பைத் தொட்டியில் போட்டனர். அரசு பேருந்துகள் செல்லக்கூடிய இந்தத்தகைய உணவகங்களில் சுகாதாரம் மற்றும் தரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்தன.

 

இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தலைமையிலான குழு பத்துக்கும் மேற்பட்ட உணவகங்களில் சோதனை மேற்கொண்டன.

 

தேதி குறிப்பிடப்படாத திண்பண்டங்கள், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கெட்டுப்போன உணவு பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து குப்பைத் தொட்டியில் போட்டு அழித்தனர். இத்தகைய செயல்பாடுகள் தொடர்பால் உணவகத்தின் உரிமையை ரத்து செய்யப்படும் என அவர்களை எச்சரித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon