--- --:--:-- --

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் முக்கிய அறிவிப்பு..!

10

குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம் படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என உணவுத்துறை செயலாளராக உள்ள ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு இரண்டு கிலோ ராகி வழங்கும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் இன்று தொடங்கப்படுகிறது.

 

இதனை ஒட்டி உதகையில் உள்ள மாவட்ட மாநிலக் கிடங்கினை தமிழ்நாடு உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்பொழுது அவர் கூட்டுறவு துறைகளின் கடைகளில் சிறுதானிய விற்பனை தொடங்கப்பட உள்ளதாக கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon