--- --:--:-- --

தினமும் அரை லிட்டர் பால், அரிசி, பருப்பு, மூன்று சிலிண்டர் இலவசம்..!

7

கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நாள்தோறும் அரை லிட்டர் பாலும் ஆண்டுக்கு மூன்று சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பெங்களூரில் இன்று கர்நாடகா மாநில பாஜகவின் தேர்தல் அறிக்கையை அந்த கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை, எடியூரப்பா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவசங்கள் மக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் 10 கிலோ அரிசி, பருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு மூன்று சிலிண்டர் இலவசமாக அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும். பேருந்துகளில் பொருட்களை இலவசமாக கொண்டு செல்லலாம் உள்ளிட்ட பல்வேறு இலவச அறிவிப்புகளை ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon