உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் : ராமதாஸ்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்கும் முயற்சியை மீண்டும் தொடங்க வேண்டும் என்றால் முயற்சியை மீண்டும் தொடங்க வேண்டும் என தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டு கொண்டுள்ளார்.
உயர் நீதிமன்ற அலுவலக தமிழையோ அல்லது பிற மாநில மொழிகளையோ பயன்படுத்த உச்ச நீதிமன்ற நிலைப்பாடு தடையாக இருந்தாலும் அதற்கு அரசமைப்பு சாஸ்திரம் தடையாக இல்லை என ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக சட்டப்பேரவைகள் மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் இது குறித்து தமிழக அரசின் குழுவை அனுப்பி பிரதமர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மூத்த வழக்கறிஞர்களிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் ராமதாஸ் கேட்டு கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





