கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பி ஓடிய நிலையில் 2 பேர் மீட்பு..!
கடலூர் மாவட்டத்தில் செயல்படும் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து ஆறு சிறுவர்கள் தப்பி ஓடிய நிலையில் இருவரை காவல் துறையினர் மீட்டுள்ளனர். வாகன சோதனையின் பொழுது இரண்டு சிறுவர்கள் பிடிபட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
புதுப்பாளையத்தில் செயல்படும் ஓஎஸ்எஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து 6 பேர் தப்பியோடி உள்ளனர். தப்பியவர்கள் அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் என தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





