--- --:--:-- --

விருதுநகர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை : தமிழக அரசு

1

தமிழகத்தில் விருதுநகர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

கருப்பசாமி என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விக்கு தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நிலமற்ற பட்டியலின மக்களுக்கு அரசு சார்பில் தருவதற்காக ஒதுக்கப்படுவது பஞ்சமி நிலம் என அழைக்கப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon