--- --:--:-- --

திருமணம் ஆன 3 வருடங்களில் விவாகரத்து பெறுகிறாரா இந்த நடிகை?

12

தமிழில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடித்திருந்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிஹாரிகா. தெலுங்கில் நன்கு பிரபலமான இவர் அங்கு சில படங்களே நடித்துள்ளார்.

 

நிஹாரிகா கொனிடேலா தனது காதலர் சைதன்யா ஜொன்னலக்டாவை டிசம்பர் 2020ம் ஆண்டு உதய்பூரில் படு பிரம்மாண்டமாக நிகழ்வுகளுடன் திருமணம் செய்துகொண்டார். கடந்த வருடத்தில் இருந்து இருவருக்கும் மன கசப்புகள் ஏற்பட்டு வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தன.

 

இந்த நிலையில் தான் இருவரும் இன்ஸ்டா பக்கத்தில் ஒருவரையொருவர் Unfollow செய்துள்ளனர். இதனால் இவர்கள் கண்டிப்பாக பிரிந்துவிட்டார்கள், இன்ஸ்டா பக்க விஷயமே உறுதி செய்கிறது என பல செய்திகள் உலா வருகிறது.

 

ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றும் வரவில்லை. நடிகை நிஹாரிகா, தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரான சிரஞ்சீவியின் சகோதரர் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon