ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நகை திருடியது இவர்தான்..!

சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். தனது வீட்டின் லாக்கரில் இருந்த 60 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், uncut diamonds உள்ளிட்ட விலையுயர்ந்த கற்கள் காணாமல் போய்விட்டதாக தெரிவித்து இருந்தார்.

 

போலீசார் வழக்கு பதிவு செய்து இது பற்றி தீவிரமாக விசாரித்து வந்தனர். வீட்டில் பணியாற்றும் வேலைக்காரர்கள் மீது தான் ஐஸ்வர்யா சந்தேகம் தெரிவித்து இருந்தார்.போலீசார் நடத்திய விசாரணையில் ஐஸ்வர்யா வீட்டில் பணியாற்றி வந்த 40 வயது ஈஸ்வரி என்ற பெண் தான் திருடியது என தெரியவந்திருக்கிறது.

 

அவரது வங்கி கணக்கில் நடந்திருக்கும் பரிவர்த்தனைகள் அடிப்படையில் போலீசார் இதை கண்டுபிடித்து இருக்கின்றனர். அவரை கைது செய்து இருக்கும் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.