என்னை பற்றி அவதூறாக பேசுகிறார்.. தனுஷ் பட துணை நடிகை பரபரப்பு புகார்..!
திருமணமான தன்னை பற்றி அவதூறு பரப்பும் விதமாக பேசி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு துணை நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பூந்தமல்லியை சேர்ந்த ஆர்த்தி என்பவர் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
இவ்வாறு போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் ஜெகன் என்பவரை மூன்று ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், முத்து பிரசாத் என்பவர் அறிமுகமான நிலையில் அவர் தன்னைப் பற்றி அவதூறாக பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





