மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது..!
காஞ்சிபுரம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பிளஸ் 1 பொது தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நேற்று தமிழ் மொழி தேர்வு நடைபெற்ற நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுத சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வறையில் செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் மட்டும் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த மாணவி தனக்கு தேர்வு எழுதிக் கொடுக்க நியமிக்கப்பட்ட ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் காஞ்சிபுரம் மகளிர் போலீசார் மாணவி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் ஜெகநாதனிடம் விசாரணை மேற்கொண்டதையடுத்து ஆசிரியரை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





