வேலைக்குப் போக சொன்ன பெற்றோரை தீயிட்டுக் கொளுத்திய மகன்..!
புதுச்சேரியில் வேலைக்கு செல்லாததால் கண்டித்த பெற்றோரை மகன் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு காஞ்சி பகுதியை சேர்ந்த தம்பதி தர்ஷிணாமூர்த்தி மற்றும் லதா இவர்களுக்கு இரண்டு மகன்கள் உடல் நிலையில் இரண்டாவது மகனான மணி என்பவர் பள்ளி ஒன்றில் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கண் பார்வையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பணிக்கு செல்லாமல் வீட்டிலிருந்து வந்துள்ளார். மணியை வேலைக்கு செல்லும்படி பெற்றோர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே ஆத்திரமடைந்த மணி, தாய், தந்தையை தீயிட்டுக் கொளுத்தி தப்பிச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் அவரின் தாய் லாதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த அவரது தந்தையை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் தப்பி ஓடிய மணியை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





