--- --:--:-- --

டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அறிவிப்பு..!

8

காரைக்குடி அருகே பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் அர்ஜுன் என்பவர் பணியாற்றி வந்தார்.

 

இவர் கடந்த மூன்றாம் தேதி பணி நேரம் முடிந்து கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ராஜேஷ் என்ற இளைஞர் மதுவால் தனது குடும்பம் சீரடைந்துவிட்டது. டாஸ்மாக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.

 

இதில் தீக்காயமடைந்த டாஸ்மாக் ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டாஸ்மாக் ஊழியர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு தர கோரியும் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 131 டாஸ்மாக் கடைகள் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டுள்ளன.

 

பெட்ரோல் குண்டு வீச்சில் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon