--- --:--:-- --

கோவில் திருவிழாக்களில் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தமிழக அரசு அதிரடி..!

7

கோயிலில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குறவன், குறத்தி ஆட்டத்தில் நாளடைவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி உடன் சேர்க்கப்பட்டு ஆபாசமாக ஆடப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாக அமைந்துள்ளதால் தடை விதித்து நடவடிக்கை எடுத்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை சார்பில் மார்ச் 10ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon