இந்தியாவில் தன் பாலின திருமணம் செல்லாது..!
தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது தன் பாலின உறவினர்களால் திருமணத்தின் சிறப்பு, திருமண சட்டத்தின் கீழ் சட்ட பிரிவால் அங்கீகரிக்க கோரி இரண்டு தன் பாலின தம்பதிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தன்பாலின உறவாளர்கள் திருமண வாழ்க்கை இந்திய குடும்ப முறைப்படி ஒப்பிட முடியாது என தெரிவித்துள்ளார். அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளையும் குடும்ப நடைமுறைகளுடன் சேர்க்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
தன்பாலின உறவாளர்களுக்கு இடையான திருமணத்தை அங்கீகரிப்பதற்கும், அவற்றை பதிவு செய்வதற்கும் அப்பாற்பட்டது என்றும், சேர்ந்து வாழ்வது தற்பொழுது குற்றமில்லாமல் இருக்கலாம் ஆனால் ஒப்பிட முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





