--- --:--:-- --

முதல்வர் ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட போது கண்கலங்கிய முதல்வரின் சகோதரி..!

1

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை அவரது மருமகன் சபரீசன், செல்வி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

 

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை அரங்கத்தில் முதலமைச்சரின் பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தேசிய தலைவர்களான தேவகவுடா, சோனியா காந்தி, ராகுல் காந்தி, நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

 

எமர்ஜென்சி காலகட்டத்தில் எலிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காட்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட அவரது சகோதரி செல்வி உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon