தேனி: தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க சோத்துப்பாறை அணையில் அதிகாரிகள் ஆய்வு!
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் குடிநீர் ஆதாரமான சோத்துப்பாறை அணையில் நீர் இருப்பு குறித்து சட்டமன்ற உறுப்பினர் பெரியகுளம் நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தனர்.
அணையின் நீர்மட்டம் 31 அடியாக இருந்த நிலையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழலை சமாளிக்க கொடைக்கானல் ஏரியிலிருந்து நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





