--- --:--:-- --

தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

8

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 15ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 15ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் செலவுக்கு இருக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon