--- --:--:-- --

இதனால்தான் ராகுல் காந்தி திருமணம் செய்ய தயங்குகிறார்.. பாஜக நிர்வாகியின் பேச்சால் சர்ச்சை..!

4

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தான் ராகுல் காந்தி திருமணம் செய்ய தயங்குகிறார் என கர்நாடக பாஜக தலைவர் நளினி குமார் கூறியது சர்ச்சையாக வெடித்துள்ளது. கர்நாடகா பாஜக தலைவர் நளினி குமார் அக்கட்சி தொண்டர்களிடையே உரையாற்றினார்.

 

அப்பொழுது பேசியவர் கொரோனா தடுப்பூசி பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய பொழுது அதில் சந்தேகம் தெரிவித்த முன்னாள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ஆண்மை குறைபாடு ஏற்படும் என மக்களை திசை திருப்பும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பியதாக விமர்சித்தார்.

 

இருப்பினும் பின்னர் அந்த தடுப்பூசி ராகுல் காந்தி செலுத்திக்கொண்டார் என்றும் அதனால் தான் திருமணம் செய்ய தயங்குகிறார் எனவும் கூறினார். இவரின் கருத்து தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon