--- --:--:-- --

அதிமுகவினர் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் : சசிகலா வெளியிட்ட தகவல்

6

அதிமுகவினர் இடைத்தேர்தல் தோல்வியை கண்டு துவண்டு விடாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் விரைவில் நல்ல தீர்வு வரும் எனவும் வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுகவை சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து வலிமையான இயக்கமாக இந்த இடைத்தேர்தலை சந்தித்து இருந்தால் வெற்றி பெற்று இருக்க முடியும் என்று தெரிவித்தார்.

 

தற்பொழுது ஏற்பட்டுள்ள தோல்வியை கண்டு அதிமுக துவண்டு விடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கும் ஒருங்கிணைந்த அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்றும் சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon