மூன்று மாத பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. பசிக்கு பால் குடிக்கும் நொடியில் பலி..!
சென்னையில் பால்குடித்த மூன்று மாத பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தனது மூன்று மாத பெண் குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார்.
சிறிது நேரத்திற்கு பின் பார்த்தபொழுது குழந்தை எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்த பொழுது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் ராஜேஸ்வரி கதறி அழுதுள்ளார். பால் குடிக்கும் பொழுது மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்ததா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





