பஞ்சாப் முதல்வருக்கும் ஆளுநருக்கும் மோதல் : உச்ச நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!
மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் ஆளுநரின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு மாநில அமைச்சருக்கு உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வரும் 3ம் தேதி பஞ்சாப் சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டுவதற்கு அனுமதி வழங்கிடுமாறு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகிக்கு அரசு சார்பில் கடிதம் வழங்கப்பட்டது. ஆனால் சட்ட ஆலோசனை பெற்ற பிறகு அனுமதி வழங்கப்படும் என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் பஞ்சாப் முதலமைச்சரின் அலுவலகம் கூறி இருந்தது.
இதனால் ஆளுநருக்கு அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சட்டமன்றத்தை கூட்ட அனுமதி மறுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி பஞ்சாப் அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு எடுத்த கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த தலைமை நீதிபதி அமர்வு உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு ஒன்று ஆளுநர் அரசியல் அமைப்பின் கீழ் உள்ளவர் என்றும் மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் படி செயல்படும் நபர் என்றும் கூறியிருந்தது சுட்டிக்காட்டப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





