--- --:--:-- --

வருகிற மார்ச் 20ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்பட போகும் முக்கிய முடிவு என்ன..?

8

தமிழ்நாடு பட்ஜெட் வருகிற 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தொழில் முனைவோர் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடம் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்த உள்ளார்.

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக வருகிற 9ம் தேதி முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெறும் திட்டங்கள் குறித்து ஆலோசித்து ஒப்புதல் அளிக்கப்பட இருக்கிறது.

 

விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் உடன் நிதி அமைச்சர் பழனிகள் தியாகராஜன் ஆலோசனை நடத்த உள்ளார். மார்ச் 2ம் தேதி தொடங்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன் வைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

மார்ச் ஆறாம் தேதி விவசாய சங்க பிரதிநிதிகள் உடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon